பிரக்ஞானந்தாவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு


பிரக்ஞானந்தாவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு
x
தினத்தந்தி 1 Feb 2024 1:12 PM IST (Updated: 1 Feb 2024 1:58 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்கு செல்வதை கண்டு நாடு பெருமை கொள்கிறது என்று நிர்மலா சீதாரமன் கூறினார்.

புதுடெல்லி,

2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீது அவர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, நிதி மசோதா 2024-ஐ நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையின்போது தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கால்சனுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு எனது பாராட்டுகள்.

விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்குச் செல்வதைக் கண்டு நாடு பெருமை கொள்கிறது. 2010-ல் 20-ஆக இருந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை தற்போது 80-ஆக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story