பிரபல மேஜிக் நிபுணர் உடல்நல குறைவால் காலமானார்


பிரபல மேஜிக் நிபுணர் உடல்நல குறைவால் காலமானார்
x

பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி. சர்மா உடல்நல குறைவால் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.



கான்பூர்,


உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்ட பகுதியை சேர்ந்தவர் பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி. சர்மா. நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இதற்காக கான்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 76. இதுபற்றி அவரது உறவினரான முகேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 2 ஆண்டுகளாக அவரது உடல்நலம் பாதிப்படைந்து இருந்தது.

ஆனால், கடந்த 4 முதல் 5 நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். நேற்றிரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர் என அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மேஜிக் செய்வதில் சிறுவயதில் இருந்தே அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் கூட பல மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுவரை 30 ஆயிரம் நிகழ்ச்சிகளை அவர் நடத்தியுள்ளார். 2001-ம் ஆண்டு இவருக்கு தேசிய மேஜிக் விருதும் மற்றும் ஷாஹென்ஷா-இ-ஜாதூ பட்டமும் வழங்கப்பட்டு உள்ளது.

மேஜிக் தவிர்த்து அரசியலிலும் ஈடுபட்ட அவர், சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து கோவிந்த்நகர் சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு உள்ளார். அவரது மறைவுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


Next Story