'நான் நடனமாடுவது போன்ற போலி வீடியோ' - டீப்-பேக் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி பேச்சு


நான் நடனமாடுவது போன்ற போலி வீடியோ - டீப்-பேக் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி பேச்சு
x

பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி,

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினி மூலம் மனித நுண்ணறிவு செயல்முறைகளை உருவாக்குவதாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் நன்மைகள் பல இருந்தாலும், இதனை தீய வழிகளில் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் சண்டை செய்யும் காட்சி ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. மேலும் தற்போது நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற ஆபாச விடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு விழாவில் பெண்களோடு சேர்ந்து கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ வைரலானது. இதுகுறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, " நான் கர்பா நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நான் பார்த்தேன். இதுபோன்ற போலி வீடியோக்கள் பரவுவது மிகவும் கவலை அளிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

வைரலான போலி வீடியோ :


Next Story