மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை - நிதின் கட்காரி
மின்சார வாகனங்களுக்கு இனிமேல் மானியம் அளிக்கத் தேவையில்லை என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது:-
ஆரம்பத்தில், மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருந்தது. அந்த வாகனங்களுக்கான கிராக்கி அதிகரித்தவுடன், உற்பத்தி செலவு குறைந்து விட்டது. எனவே, இனிமேல் மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிப்பது தேவையற்றது.
வாடிக்கையாளர்களும் மின்சார வாகனம் அல்லது சி.என்.ஜி. வாகனங்களை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வருகிறார்கள். எனவே, மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை. இனிமேல் மானியம் கேட்பது நியாயமல்ல. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வசூலிக்கும் ஜி.எஸ்.டி.யை விட மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைவுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story