குருவாயூர் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு யானை பந்தயம்


குருவாயூர் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு யானை பந்தயம்
x

குருவாயூர் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் உற்சவ திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று யானைகளுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட 19 யானைகளில் 5 யானைகள் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் அவற்றிற்கு தனியாக ஓட்டப்பந்தம் நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தில் கோகுல் என்ற யானை வெற்றி பெற்றது. இந்த யானை ஓட்டப்பந்தயத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

பந்தயத்தில் கலந்து கொண்ட யானைகளுக்கு எந்த வித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக கால்நடை டாக்டர்கள் பந்தயத்தில் பங்கேற்ற யானைகளை கண்காணித்து வந்தனர். மேலும் பொது மக்களின் கூட்டத்திற்குள் யானை நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதற்காகவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த யானை ஓட்டப்பந்தயம் மக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story