இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 9-ந் தேதி பெங்களூரு வருகை


இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 9-ந் தேதி பெங்களூரு வருகை
x

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 9-ந் தேதி பெங்களூரு வருகை தர இருக்கிறார்கள்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் வருகிற 9-ந் தேதி பெங்களூரு வருகிறார்கள்.

அன்றைய தினம் சட்டசபை தேர்தலுக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர்கள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து விகாச சவுதாவில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திக்கிறார்கள். பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அவர்களை சந்திக்கிறார்கள். அவர்களிடம், தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது பல்வேறு கட்டமாக நடத்துவதா? என்பது குறித்து கருத்துகளை கேட்கிறார்கள்.

இந்த கருத்துகளின் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story