புற்றுநோய்க்கு போலி மருந்துகள் தயாரிப்பு: டெல்லியில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை - ரூ.65 லட்சம் சிக்கியது
போலி மருந்துகள் விற்று வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி,
டெல்லியில் புற்றுநோய் பாதிப்புக்கு தனியார் நிறுவனம் ஒன்று மருந்து தயாரித்து குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு விற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மருந்துகள் போலி என்பதும் ஆஸ்பத்திரி நிர்வாகம், நோயாளிகளை நம்பவைத்து பல லட்சங்களை அந்த நிறுவனம் சுருட்டியதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலி மருந்துகள் விற்று வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்கள் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ரூ.65 லட்சத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story