'கொள்ளையடிப்பதை டி.கே.சிவக்குமார் நிறுத்த வேண்டும்'குமாரசாமி ஆவேசம்
இனி கொள்ளையடிப்பதை டி.கே.சிவக்குமார் நிறுத்த வேண்டும் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு :-
பொறுப்புடன் பேச வேண்டும்
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, தமிழ்நாடும், கர்நாடகமும் சகோதரர்களை போல் இருக்க வேண்டும் என்று தான் சொன்னேன். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி நான் கூறவில்லை. எனது இந்த கருத்தை மேற்கோள்காட்டி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கருத்து கூறியுள்ளார்.
கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் நான் கூறினேன். தமிழக விவசாயிகளுக்கு நமது விவசாயிகள் அநீதி இழைக்கவில்லை. அதே போல் நமது விவசாயிகளுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்று சொன்னேன்.
இவ்வாறு கூறியது தவறா?. டி.கே.சிவக்குமார் பொய் கூறிக்கொண்டு எத்தனை நாட்கள் அரசியல் செய்வார். பொறுப்பான பதவியில் இருக்கும் அவர் பொறுப்புடன் பேச வேண்டும். பேசும்போது நீர்ப்பாசனத்துறை துறையின் மதிப்பை காக்க வேண்டும். அதை விடுத்து வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. அவர் செய்த முறைகேடுகள் நிறைய உள்ளன. இப்போதாவது அவர் கவுரவத்துடன் பணியாற்ற வேண்டும்.
கர்நாடகம் வளர்ச்சி
இனி கொள்ளையடிப்பதை டி.கே.சிவக்குமார் நிறுத்த வேண்டும். ஒரு அண்ணனாக எனது இந்த கருத்தை ஏற்க வேண்டும். கர்நாடகத்தை வளர்ச்சி அடைய செய்ய அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமானால் 10 ஆண்டுகள் அவரே ஆட்சி அதிகாரத்தில் இருக்கட்டும்.