பாதுகாப்பு குறைபாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு


பாதுகாப்பு குறைபாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
x

ராஜ்நாத்சிங்

தினத்தந்தி 14 Dec 2023 11:17 AM IST (Updated: 14 Dec 2023 12:03 PM IST)
t-max-icont-min-icon

வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. இதை அனைவரும் கண்டித்து இருக்கிறோம். ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.

எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.



Next Story