உலக தரத்திலான நவீன வசதிகளுடன் 200 ரெயில் நிலையங்களை புனரமைக்க முடிவு; மத்திய ரெயில்வே மந்திரி
நாடு முழுவதும் 200 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் புனரமைக்க அரசு முடிவு செய்துள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறியுள்ளார்.
அவுரங்காபாத்,
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மராட்டியத்தின் அவுரங்காபாத் நகர ரெயில் நிலையத்தில் நடந்த, ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்திய ரெயில்வே, நாட்டில் உள்ள 200 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் புனரமைக்க முடிவு செய்துள்ளது. 47 ரெயில் நிலையங்களில் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் ஒதுக்கீடு நடைமுறைகள் முடிவடைந்து விட்டன என கூறியுள்ளார்.
அவற்றில் 32 ரெயில் நிலையங்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன என்றும் கூறியுள்ளார். அரசின் திட்டப்படி, காத்திருப்பு அறைகள், உணவு விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு வசதிகள் உள்ளிட்ட உலக தரத்திலான வசதிகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story