திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாள் வீதி உலா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாள் வீதி உலா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான இன்று சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளேயே நடந்தது. இந்த ஆண்டு கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரமாண்டமாக வாகன சேவை நடக்கிறது.

இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான இன்று சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்ரி நாராயணன் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

இந்த வீதி உலாவில் கோவில் ஜீயர்களின் சீடர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். மேலும் கோலாட்டம் ஆடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடங்கள் அணிந்தும் ஊர்வலங்கள் நடத்தினர்.

1 More update

Next Story