மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய மந்திரியின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.
கேள்விக்கு பதில் அளித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில்,
இந்தியாவில் எந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை. எய்ம்ஸ் விவகாரத்தை தேவையில்லாமல் தமிழ்நாடு எம்பிக்கள் அரசியல் ஆக்குகின்றனர்.
போதிய ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதிக்க மாட்டேன்; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது.; சுகாதாரத்தை அரசியல் பிரச்சினையாக ஆக்காதீர்கள் என கூறினார்.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய மந்திரியின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.