சம்மதத்துடன் ஏற்படும் ஆண்-பெண் தொடர்பு பலாத்காரம் ஆகாது : கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு


சம்மதத்துடன் ஏற்படும் ஆண்-பெண் தொடர்பு பலாத்காரம் ஆகாது : கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு
x

கோப்புப்படம்

சம்மதத்துடன் ஏற்படும் ஆண்-பெண் தொடர்பு பலாத்காரம் ஆகாது என்று கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் காசர்கோட்டை சேர்ந்த திருமணமான ஒரு ஆணும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்தனர். அந்த பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து விலக முயன்றார். அதற்கு அந்த ஆண் சம்மதிக்கவில்லை. மாறாக தற்கொலை செய்து கொள்ள போவதாக அந்த பெண்ணை மிரட்டினார். இதை தொடர்ந்து அந்த பெண் காசர்கோடு போலீசில் அந்த நபருக்கு எதிராக பாலியல் புகார் அளித்தார். போலீசார் பாலியல் பலாத்காரம் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை எதிர்த்து அந்த நபர் கேரள ஐகோர்ட்டை நாடினார். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி மனு அளித்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு 'சம்பந்தப்பட்ட ஆண் திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பு திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். எனவே இது பாலியல் பலாத்காரம் ஆகாது. எனவே மனுதாரர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு உள்ளது.


Next Story