வெப்பநிலை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு உதவ குழு - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று மணியளவில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது..
புதுடெல்லி,
நாட்டின் பல இடங்களில் வெப்ப அலை பரவி காணப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது..
இந்த கூட்டத்தில், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பால், இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில் ,
வெப்பநிலை அதிகரிக்கும் மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்படும் .
ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.என தெரிவித்தார்.