பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஏலத்தின் தேதி நீட்டிப்பு


பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஏலத்தின் தேதி நீட்டிப்பு
x

கோப்புப்படம்

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஏலத்தின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு. பின்னர் அதனை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

2019 - 2021 ஆண்டு டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் நினைவு சின்னங்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்தது.

இந்த சூழலில் 1,200-க்கு மேற்பட்ட இப்பொருட்களின் ஏலம், பிரதமரின் பிறந்தநாளான கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் ஏலம் முடிவடைய இருந்தது.

இந்தநிலையில், ஏலத்தின் கடைசி தேதி, வருகிற 12-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story