சட்டத்துறையில் வாழ்நாள் சாதனை; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு விருது
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்டத்துறையில் உள்நாட்டிலும், உலகளாவிய அளவிலும் செய்துள்ள வாழ்நாள் சாதனைக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு சட்ட கல்லூரி மையத்தின் உலகளாவிய தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காணொலிக்காட்சி வழியாக 11-ந் தேதி நடக்கிற விழாவில் இந்த விருது தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்படுகிறது. இவர், விருதினை வழங்குகிற அதே ஹார்வர்டு சட்ட கல்லூரியில்தான் சட்ட மேற்படிப்பு (எல்எல்.எம்) மற்றும் நீதித்துறை அறிவியலில் டாக்டர் பட்டமும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவின்போது தலைமை நீதிபதி சந்திரசூட்டுன், ஹார்வர்டு சட்ட கல்லூரி பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் கலந்துரையாடுவார் என தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story