புதுவையில் இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்


புதுவையில் இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 9 Nov 2023 3:55 AM (Updated: 9 Nov 2023 4:53 AM)
t-max-icont-min-icon

நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தீபாவளியையொட்டி புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி நகருக்குள் மாலை 4 மணி முதல் அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story