தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமக்கும் சந்திரயான் 3 - பிரதமர் மோடி பெருமிதம்


தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமக்கும் சந்திரயான் 3 - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 14 July 2023 12:17 PM IST (Updated: 14 July 2023 12:49 PM IST)
t-max-icont-min-icon

தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சந்திரயான் 3 விண்கலம் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, சந்திராயன் 3 இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"சந்திரயான்-3, இன்று தனது மூன்றாவது சந்திரப் பயணத்தை தொடங்குகிறது. சந்திரயான்-3 பணிக்கு வாழ்த்துக்கள்!. தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சந்திராயன் 3 விண்கலம் சுமந்து செல்லும். இந்திய விண்வெளித்துறையில் இன்றைய தினம் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். விண்வெளித்துறையில் இந்தியா மிகவும் ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது. நிலவில் நீர் மூலக்கூறுகள் உள்ளதை சந்திராயன் 1 கண்டுபிடித்தது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சந்திரயான்-3 பணி மற்றும் விண்வெளி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் செய்த முன்னேற்றங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story