ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை - மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்


ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை - மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
x

தமிழகத்தில் 5 ரெயில் நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 5 ரெயில் நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறை போக்குவரத்து மாற்றத்திற்கான ஹைப்பர்லூப் திட்டத்திற்கு ரூ.8.5 கோடி ரெயில்வே சார்பில் வழங்கப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு ஹைப்பர்லூப் ரெயில்வே திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

நாட்டில் ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாயப்ப்பில்லை. புறநகர் ரெயில்களில் ஏசி வசதி அறிமுகப்படுத்தப்படும்.

தமிழகத்தில் எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.760 கோடி செலவில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.

வனவிலங்குகள் பாதிக்காத வகையில் ரெயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. யானைகள் கடக்கும் இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செலவு முக்கியமல்ல, யானைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்.

தமிழ் உட்பட எல்லா மொழிகளையும் நாம் நேசிப்போம். மொழிப்பாகுபாடு பார்க்க வேண்டாம். அதேபோல, ரெயில் நிலையங்களுக்கு பெயர் வைப்பதில் பாகுபாடில்லை.முதியோர் கட்டண சலுகை ரத்தானதை மீண்டும் திரும்பப்பெற வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story