சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது


சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 May 2024 11:54 AM IST (Updated: 13 May 2024 2:17 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இந்த தேர்வினை எழுதினர். வரும் 20-ம் தேதிக்கு பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என சி.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் முன்கூட்டியே இன்று சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் www.cbse.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 87.33 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 87.98 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விழுக்காடு 98.47 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 93.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 22.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 20.95 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 0.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Next Story