12-ந் தேதி நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்


12-ந் தேதி நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்
x

கோப்புப்படம்

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 102-வது கூட்டம் வரும் 12-ந் தேதி நடக்கிறது.

புதுடெல்லி,

காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா, தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.

காவிரி ஒழுங்காற்றுக்குழு இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ந் தேதி கூடியது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மழை பெய்து வருவதால் தண்ணீர் வினியோகம் தொடர்பாக பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் மழை காரணமாக உபரியாக திறந்து விடப்படும் தண்ணீரை கணக்கில் கொள்ளக்கூடாது என மேலாண்மை ஆணையத்தின் கடந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 102-வது கூட்டம் வரும் 12-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு குழுவின் தலைவர் வினிக்குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story