தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா பிடிவாதம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 95 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.
புதுடெல்லி,
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கிறார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நிலுவையில் உள்ள 95 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க முடியாது கர்நாடகா திட்டவட்டமாக கூறியுள்ளது. மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story