கார்ட்டூனை பார்த்து, அதிர்ந்து செல்போனை தூர வைத்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா


கார்ட்டூனை பார்த்து, அதிர்ந்து செல்போனை தூர வைத்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா
x

சமீபத்தில் கார்ட்டூன் ஒன்றை பார்த்து, அதிர்ந்து தனது செல்போனை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தூர வைத்ததற்கான காரணம் அனைவரையும் யோசிக்க வைக்கிறது.



புதுடெல்லி,


தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் வலைதளத்தில் பல ஊக்கமளிக்கும் மற்றும் நகைச்சுவையான டுவிட்டுகளை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவரை 1 கோடி பேர் டுவிட்டரில் பின்தொடருகின்றனர்.

இதன்படி சமீபத்தில் அவர் வெளியிட்டு டுவிட் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதில், ஸ்மார்ட்போனுக்கு அடிமையானதன் விளைவை பற்றி எடுத்துரைக்கும் வகையிலான வரைபடம் (கார்ட்டூன்) ஒன்று இடம் பெற்று உள்ளது.

அந்த கார்ட்டூனில் காப்பகத்தில் முதியோர் சிலர் உள்ளனர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., வீடியோ என பதிவிட்டு அந்த காலங்களை கடந்த பின்னரான முதியவர்கள் அவர்கள்.

வயது முதிர்ந்த பின்னர், அவர்கள் மொபைல் போனை பிடிக்கும்போது எப்படி இருப்போமோ, அதனை போன்றே உடல் முன்னோக்கி வளைந்து காணப்படுகின்றனர்.

இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என வேதனை தெரிவித்து உள்ள அவர், இந்த டுவிட்டை பதிவிட்ட பின்னர் தனது மொபைல் போனை தூர வைத்து விட்டேன் என கூறியுள்ளார்.

இந்த ஞாயிற்று கிழமை எனது கழுத்து நேராக இருக்கும்படியும் மற்றும் தலை மேல்நோக்கி நிமிர்ந்து இருக்கும்படியும் பார்த்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். மொபைல் போனுக்கு அடிமையான பின்னர் அதன், உடல் சார்ந்த, நீண்டகால கடுமையான விளைவுகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த பதிவை அவர் வெளியிட்டு உள்ளார்.



Next Story