பஞ்சாப் எல்லையில் சீன டிரோனை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை
எல்லைப்பகுதி அருகே சீன டிரோனை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள தார்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நூர்வாலா என்ற கிராமத்திற்கு அருகே வயல்வெளியில் டிரோன் ஒன்று கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அது சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் என்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 20-ந்தேதி தார்ன் தரன் மாவட்டத்தில் சீன டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story