புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

கோப்புப்படம் 

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு துணை தூதரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஜிப்மர் இயக்குனருக்கு வந்த ஒரு இ-மெயிலில் ஜிப்மரில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு துணை தூதரக அலுவலகத்துக்கு இன்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வந்த இ-மெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் பிரெஞ்சு துணை தூதரக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முழு சோதனைக்கு பிறகே, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story