பீகாரில் பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்தது: மீட்பு பணி தீவிரம்


பீகாரில் பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்தது: மீட்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Sept 2023 1:42 PM IST (Updated: 14 Sept 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு பாக்மதி நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்த நிலையில், 20 மாணவர்கள் மீட்கப்பட்டனர். மற்ற மாணவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.

இதுபற்றி முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.


Next Story