குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு
குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபைக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது.
காந்திநகர்,
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேலும், 250 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
ஆங்கில/இந்தி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பின்வறுமாறு:-
குஜராத் - மொத்த தொகுதிகள் 182 - பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
குஜராத்:-
நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்
பாஜக - 117 முதல் 140 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 34 முதல் 51 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 6 முதல் 13 இடங்களில் வெற்றி
ரிபப்ளிக் டிவி செய்தி நிறுவனம்:-
பாஜக - 128 முதல் 148 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 30 முதல் 42 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 2 முதல் 10 இடங்களில் வெற்றி
டிவி 9 குஜராத்தி செய்தி நிறுவனம்:-
பாஜக - 125 முதல் 130 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 40 முதல் 50 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 3 முதல் 5 இடங்களில் வெற்றி
என்டி டிவி செய்தி நிறுவனம்
பாஜக - 131 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 41 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 10 இடங்களில் வெற்றி
பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் குஜராத்தில் பாஜக வெற்றிபெறலாம்.
இமாச்சலபிரதேசத்தில் 68 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இமாச்சலபிரதேச தேர்தல்:-
ஆஜ் தக் செய்தி நிறுவனம்
பாஜக - 24 முதல் 34 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 30 முதல் 40 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 0
இந்தியா டிவி செய்தி நிறுவனம்
பாஜக - 35 முதல் 40 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 26 முதல் 31 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 0
நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்
பாஜக - 32 முதல் 40 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 27 முதல் 34 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 0
ரிபப்ளிக் டிவி செய்தி நிறுவனம்:-
பாஜக - 34 முதல் 39 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 28 முதல் 33 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 0 முதல் 1 இடத்தில் வெற்றி
என்டி டிவி செய்தி நிறுவனம்:-
பாஜக - 37 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 30 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி - 0 முதல் 1 இடத்தில் வெற்றி
பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் இமாச்சலபிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம்.
டெல்லியில் 250 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 126 இடங்களில் வெற்றி தேவை.
டெல்லி மாநகராட்சி தேர்தல்
ஆஜ் தக் செய்தி நிறுவனம்:-
ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி
பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி
நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:-
ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி
பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி
டைம் நவ் செய்தி நிறுவனம்:-
ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி
பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி
பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெறலாம்.
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.