ராமர் கோவில் விழாவில் பங்கேற்கவில்லை: சோனியா காந்திக்கு ஸ்மிரிதி இரானி கண்டனம்
ராமபிரான் மீது தனக்கு பக்தி இல்லை என்பதை சோனியா காந்தி காட்டியுள்ளதாக ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
பாட்னா,
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக சோனியா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என நேற்று காங்கிரஸ் அறிவித்தது.
இதற்காக சோனியாவுக்கு பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரதி இரானி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அயோத்தியில் 22-ந்தேதி நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா பங்கேற்கவில்லை என அறிந்தேன். அவரிடம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ராமபிரான் மீது தனக்கு பக்தி இல்லை என்பதை சோனியா காந்தி காட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்' ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அக்கட்சி, அந்த அழைப்பை மறுத்ததில் ஆச்சரியமில்லை என தெரிவித்தார்.