நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பா.ஜ.க மட்டுமே- ஜே.பி. நட்டா பேச்சு


நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பா.ஜ.க மட்டுமே- ஜே.பி. நட்டா பேச்சு
x

Image Tweeted By @BJP4Gujarat

பா.ஜ.க-வை தவிர வேறு எந்த தேசியக் கட்சியும் நாட்டில் இல்லை என ஜே.பி. நட்டா பேசினார்.

துவாரகா,

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பா.ஜ.க மட்டுமே என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தின் துவாரகாவிலிருந்து போர்பந்தர் வரை பாஜகவின் இரண்டாவது குஜராத் யாத்திரையின் கொடியேற்று விழாவில் ஜே.பி. நட்டா இன்று பங்கேற்றார்.

இந்த விழாவில் ஜே.பி. நட்டா பேசுகையில், " ஒரு காலத்தில் அரசியல் என்றால் ஊழல், பதவியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி மகிழ்வது என்ற நிலை இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இந்த கலாச்சாரத்தை மாற்றி, சேவையில் ஈடுபட்டார்" என்றார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியை மறைமுகமாக சாடிய நட்டா, "பா.ஜ.க-வை தவிர வேறு எந்த தேசியக் கட்சியும் இல்லை. காங்கிரஸ் சுருங்கி விட்டது. அது இனி தேசியக் கட்சி அல்ல, சகோதர சகோதரிகளின் கட்சி" என விமர்சித்தார்.


Next Story