இமாசல பிரதேச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார், ஜே.பி. நட்டா
சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து ஜே.பி. நட்டா மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் பா.ஜனதா 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி, கடந்த முறை போட்டியிட்ட அதே வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி.நட்டா, இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
எனவே சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து அவர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இமாசல பிரதேசத்தில் இருந்து தேர்வாகி இருந்த எம்.பி. பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.