திரிபுராவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டன - முதல்-மந்திரி மாணிக் சாஹா
திரிபுராவில் பாஜக தலைமையிலான அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக முதல்-மந்திரி மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.
அகர்தலா,
திரிபுராவின், உனகோட்டி மாவட்டத்தில் பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழாவில் முதல்-மந்திரி மாணிக் சாஹா கலந்து கொண்டார். அதன்பிறகு நடைபெற்ற பேரணியில் அவர் உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது, திரிபுராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது ஏற்பட்ட பயங்கரமான நாட்களையும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட பயங்கர அலைகளையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது."
நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா போன்ற தலைவர்களால் வழிநடத்தப்படும் பாஜகதான் மக்களுக்கு ஒரே வழி. பயங்கரவாதத்தை நம்பாத கட்சி பாஜக,
கடந்த 2018-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்திற்காகவும், மாநில மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது. மற்ற கட்சிகளுக்கு அரசியல் வன்முறையின் நீண்ட வரலாறு உண்டு.
"மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்த்த பிறகு, திரிணாமுல் காங்கிரசும், மாநிலத்தை ஆள அதே பயங்கரவாத தந்திரத்தை பின்பற்றியது. பாஜக அலுவலகம் ஒரு கோயில் போன்றது, அங்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வடகிழக்குக்கான பிரதமர் மேம்பாட்டு முயற்சி' என்ற புதிய திட்டத்தை மோடி வெளியிட்டு, இப்பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். திரிபுராவின் வளர்ச்சியில் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.