தமிழ்நாட்டு பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்


தமிழ்நாட்டு பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
x

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சாதிகளை சேர்த்து, பட்டியலில் மாற்றம் செய்ய கோரிக்கை முன்வைக்கின்றன. அதை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு அவ்வப்போது நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, இமாசலபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைக்க அந்த மாநில அரசுகள் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அதையொட்டி, அரசியல் சட்ட (பழங்குடியினர்) ஆணை திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா தாக்கல் செய்தார். 4 மாநிலங்களுக்கும் 4 தனித்தனி மசோதாக்களை அவர் தாக்கல் செய்தார்.


Next Story