பீகார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பீகார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரெயில்வே  அறிவிப்பு
x

போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.உத்தரபிரதேசத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story