குருவாயூர் கோவில் மேல்சாந்தியாக ஆயுர்வேத டாக்டர் நியமனம்


குருவாயூர் கோவில் மேல்சாந்தியாக ஆயுர்வேத டாக்டர் நியமனம்
x

குருவாயூர் கோவில் மேல்சாந்தியாக பாடகர், யூடியூபர் என பன்முகத்தன்மை கொண்ட ஆயுர்வேத டாக்டர் நியமனம் செய்யப்பட்டார்.

திருச்சூர்,

கேரளாவில் புகழ்பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமை பூசாரி) 34 வயதான கிரண் ஆந்த் காக்காட் என்ற ஆயுர்வேத டாக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார்.ஏராளமான பூசாரிகளை பெற்ற நீண்ட பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த டாக்டர் கிரண் ஆனந்த் காக்காட் அடுத்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு மேல்சாந்தியாக நீடிப்பார்.

ரஷியாவில் 6 ஆண்டுகள் ஆயுர்வேத டாக்டராக பணியாற்றி உள்ள டாக்டர் கிரண் ஆனந்த் காக்காட், யூடியூபர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.

கேரளாவின் புகழ்பெற்ற கோவிலின் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து டாக்டர் கிரண் ஆனந்த் காக்காட் கூறுகையில், 'கடவுளின் அருளாலும், ஆசியாலும் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்து இருக்கிறது. நான் ரஷியாவில் இருந்தபோதும் பூஜைகள் செய்து கொண்டிருந்தேன். இந்தியா திரும்பியதும் 'பரிகார' பூஜைகளை மேற்கொண்டேன்' என்று தெரிவித்தார்.மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டு இருப்பதால் தனது மருத்துவப்பணி மற்றும் பிற பணிகளை ஒதுக்கி வைக்க வேண்டியிருப்பதாக தெரிவித்த அவர், ஆறு மாதத்துக்குப்பின் தனது அன்றாட பணிகளைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.


Next Story