மலேரியா, டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ரமேஷ் உத்தரவு


மலேரியா, டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ரமேஷ் உத்தரவு
x

சிக்கமகளூருவில் மலேரியா, டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;

அறுவை சிகிச்சை மூலம்...

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் தனது அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர், கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 3,442 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 53 சதவீத குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 15 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன.

பிரசவத்தின்போது எதற்காக அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுகபிரசவம் செய்வதற்கு டாக்டர்கள் முயற்சிக்க வேண்டும். பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண்களை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சத்து மாத்திரைகள்

மலேரியா, டெங்கு நோய் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான 3 நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தின்போது கலெக்டர் ரமேஷ், காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீசை வெளியிட்டார்.


Next Story