முறையாக அனுமதி வழங்கும்படி கோரி சிவமொக்காவில், ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்


முறையாக அனுமதி வழங்கும்படி கோரி சிவமொக்காவில், ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2023 6:45 PM (Updated: 4 Sept 2023 6:46 PM)
t-max-icont-min-icon

முறையாக அனுமதி வழங்கும்படி கோரி சிவமொக்காவில், ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

சிவமொக்கா-

சிவமொக்கா(மாவட்டம்) டவுனில் ஏராளமான இளைஞர்கள் புதிதாக ஆட்டோக்கள் வாங்கி ஓட்டி வருகிறார்கள். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதிவு செய்தும் அவர்களால் நகரில் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் சிவமொக்கா மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளாக புதிய ஆட்டோக்கள் எதுவும் நகரில் ஓட உரிமம் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக ஆட்டோக்கள் வாங்கி ஓட்ட முடியாத டிரைவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேரடி உதவியாளரிடம் மனு கொடுத்தனர். அதில் தங்களுக்கு முறையாக ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்து இருந்தனர்.

1 More update

Next Story