2041ல் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும் - ஹிமந்தா பிஸ்வா சர்மா


2041ல் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும் - ஹிமந்தா பிஸ்வா சர்மா
x

அசாமில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை முஸ்லிம்களின் மக்கள் தொகை 30 சதவீதமாக அதிகரித்து வருவதாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், 2041ம் ஆண்டுக்குள் அவர்கள் பெரும்பான்மையாக மாறுவார்கள் என்றும் அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஹிமந்தா கூறியதாவது,

"புள்ளிவிவர மாதிரியின் படி அசாமில் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 40 சதவீதம் மாறிவிட்டனர். இதன்படி 2041ல் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும். இது நிஜம், அதை யாராலும் தடுக்க முடியாது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. அதேபோல 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை முஸ்லிம்களின் மக்கள் தொகை 30 சதவீதமாக அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் காங்கிரசுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான தூதர் ராகுல் காந்தி ஆனால் அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story