ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் - அமித்ஷா


ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் - அமித்ஷா
x

ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் அடங்கிய சிவப்பு டைரியை கைப்பற்றியதாக மாநில மந்திரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் மாநில அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் ராஜஸ்தானின் கங்காபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''சிவப்பு வண்ணத்தை பார்த்து முதல்-மந்திரி அசோக் கெலாட் சமீப காலமாக மிகுந்த அச்சத்தில் உள்ளார். ஏனெனில் அந்த டைரியின் வண்ணம் சிவப்பு, ஆனால் அதில் மறைக்கப்பட்ட பரிமாற்றங்கள் அனைத்தும் கருப்பு. பல கோடி ஊழல் தொடர்பான விவரங்கள் அதில் அடங்கி உள்ளன. ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு கொஞ்சமாவது மானம் இருந்தால் உடனடியாக பதவி விலகி விட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.


Next Story