சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பு: காஷ்மீரில் இயல்புநிலை


சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பு: காஷ்மீரில் இயல்புநிலை
x

Image Courtacy: AFP

கோர்ட்டு தீர்ப்பால் காஷ்மீரில் பதற்றமோ, பரபரப்போ ஏற்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல திறந்திருந்தன

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம்கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது.

இதன்படி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. மேலும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதே சமயம் கோர்ட்டு தீர்ப்பால் காஷ்மீரில் பதற்றமோ, பரபரப்போ ஏற்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல திறந்திருந்தன. மக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தீர்ப்பை வரவேற்று காஷ்மீரில் பல்வேறு அமைப்பினர் கொண்டாடி மகிழ்ந்தனர். வால்மீகி சமாஜ் என்ற அமைப்பினர் இனிப்புகள் வழங்கி தீர்ப்பை வரவேற்றனர்.


Next Story