புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்


புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
x

புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புதுச்சேரி மாநில புதிய துணை நிலை கவர்னராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கவர்னராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு கவர்னராக குலாப் சந்த் கட்டாரியாவும், சிக்கிம் கவர்னரான லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் கவர்னராகவும் மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மணிப்பூர் கவர்னராக அவருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது,

ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மராட்டிய மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராக கூடுதல் பொறுப்பு அவர் வகித்து வந்த நிலையில், அம்மாநில புதிய கவர்னராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநிலத்தின் புதிய கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில கவர்னராக ராமன் தேகாவும், மேகாலயா கவர்னராக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story