காஷ்மீரில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி


காஷ்மீரில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி
x

கோப்புப்படம்

காஷ்மீரில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

ஜம்மு,

காஷ்மீரின் தோடா மற்றும் கிஸ்த்வார் மாவட்டங்களை மையமாக வைத்து நேற்று முன்தினம் 5.4 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பள்ளி குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்ததுடன், ஏராளமான கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றும் அங்கு அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தவகையில் தோடா மாவட்டத்தில் காலை 7.56 மணிக்கு 3.5 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கிஸ்த்வார் மாவட்டத்தில் காலை 8.29 மணிக்கு 3.3 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக தோடா மாவட்டத்தில் அதிகாலை 2.20 மணிக்கும் (4.3 புள்ளிகள்), ரியாசி மாவட்டத்தில் 2.43 மணிக்கும் (2.8 புள்ளிகள்) அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தன.

இந்த சம்பவங்களால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ இல்லை. எனினும் அடுத்தடுத்த இந்த நில அதிர்வுகள் மேற்படி மாவட்டங்களில் மக்களிடையே பயங்கர பீதியை ஏற்படுத்தின.


Next Story