அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சனேயர் பிறந்தார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி


அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சனேயர் பிறந்தார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி
x

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சனேயர் பிறந்தார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கொப்பல்:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கொப்பலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆஞ்சனேயர் பிறந்த இடம் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சனேயர் பிறந்தார் என்பது உறுதி. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதனால் தான் நாங்கள் இந்த மலையை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆஞ்சனேயர் பிறந்த இடம் குறித்த விஷயத்தில் கர்நாடக மற்றும் ஆந்திரா மாநிலங்கள் 2 இடங்களை கூறுவது தவறு. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சனேயர் பிறந்தார் என்று நம்புகிறார்கள். இந்த மலைக்கு ரோப்கார் வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மலையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மேம்படுத்தப்படும். மைசூரு மற்றும் ஹம்பியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்த நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story