ஆந்திராவில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.2.5 லட்சத்தை இழந்த பெண் தற்கொலை


ஆந்திராவில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.2.5 லட்சத்தை இழந்த பெண் தற்கொலை
x

கோப்புப்படம்

ஆந்திராவில் ஆன்லைன் விளையாட்டில் ரூ. 2.5 லட்சத்தை இழந்த பெண் ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லூர்,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ. 2.5 லட்சத்தை இழந்த பெண் ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கவிதா என்ற பெண் ஆன்லைன் விளையாட்டுக்கான வாலட்டில் ரூ. 2.5 லட்சத்தை சேர்த்துள்ளார். அவருடைய தாயுடைய பணம் மற்றும் சில நண்பர்களிடம் கடன் வாங்கி இந்த பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் விரைவில் அந்த பணத்தை இழந்துள்ளார்.

இதையடுத்து ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தது குறித்து தனது தந்தை வெங்கடேஸ்வர ரெட்டியிடம் கவிதா கூறியுள்ளார். அவர் போலீசில் புகாரளித்துள்ளார். இருப்பினும் பணத்தை இழந்த விரக்தியில் கடந்த ஜூன் 15 அன்று கவிதா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கவிதாவை சிகிச்சைக்காக விஞ்சமுரு மற்றும் நெல்லூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் கவிதா சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story