ஆந்திர பிரதேசம், தெலுங்கானா முதல்-மந்திரிகள் சந்திப்பு; இருமாநில பிரிப்பு பற்றி விரிவான ஆலோசனை


ஆந்திர பிரதேசம், தெலுங்கானா முதல்-மந்திரிகள் சந்திப்பு; இருமாநில பிரிப்பு பற்றி விரிவான ஆலோசனை
x

தெலுங்கானாவின் ஐதராபாத் நகருக்கு சென்ற ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை, ரேவந்த் ரெட்டி முறைப்படி வரவேற்றார்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி தெலுங்கானா தனியாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவின் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவரை நேருக்கு நேராக சந்திப்பதற்கு இன்று அனுமதி கேட்டிருந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருடைய கோரிக்கையை வரவேற்ற ரேவந்த் ரெட்டி, சந்திக்க இன்று வருகை தரும்படி கூறினார். இதனை தொடர்ந்து ஐதராபாத் நகருக்கு சென்ற ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை, ரேவந்த் ரெட்டி முறைப்படி வரவேற்றார்.

பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரித்ததில் உள்ள நீண்டகால விவகாரங்களை பேசி தீர்த்து கொள்ளும் நோக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதன்படி, தெலுங்கானா அரசின் மகாத்மா ஜோதி ராவ் புலே பிரஜா பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், பல்வேறு அரசால் நடத்தப்படும் மையங்கள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றை பிரிப்பது மற்றும் பிற விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story