ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்


ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
x

ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமராவதி,

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களை அந்தந்த கட்சிகளின் புகார்களின் அடிப்படையில் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் தம்மினேனி சீதாராம் உத்தரவிட்டுள்ளார்.

மதலோ கிரிதர் ராவ், கரணம் பலராம், வல்லபனேனி வம்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாசுபள்ளி கணேஷ், ஆனம் ராமநாராயண ரெட்டி, மேகபதி சந்திரசேகர் ரெட்டி, கே. ஸ்ரீதர் ரெட்டி, உண்டவல்லி ஸ்ரீதேவி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.

8 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வதற்கு முன் தங்களின் புகாருக்கு விளக்கம் அளிக்கக்கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆந்திராவில் சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளதால், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் ஸ்ரீதர் ரெட்டியின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story