ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் 9-ந்தேதி தொடக்கம்
ஆந்திராவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது.
அமராவதி,
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதேநேரம் பீகார் அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது. இந்த வரிசையில் ஆந்திராவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது.
அங்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும் என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார். ஏற்கனவே 2 நாட்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 9-ந்தேதி விரிவாக கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது.
Related Tags :
Next Story