மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம்; காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பா...?


மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம்; காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பா...?
x

மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க கூடும் என கூறப்படுகிறது.

புதுடெல்லி,

மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று கூடுகிறது. மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய கலவரம் இன்னும் தொடருகிறது. இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளிடம் கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இக்கூட்டம் மதியம் 3 மணிக்கு கூடவுள்ளது.

இந்த கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூறும் போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கான முடிவு "மிகவும் தாமதமானது" என்று கூறிய காங்கிரஸ், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் இல்லாத நேரத்தில் கூட்டத்தை நடத்துவதற்கான நடவடிக்கை, இந்த சம்பவங்கள் அவருக்கு முக்கியமில்லை என தோன்றுகிறது என கூறி உள்ளது.


Next Story