மூன்றாவது முறை.. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக நீடிக்கிறார் அஜித் தோவல்


Ajit Doval re-appointed as NSA
x

பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித் தோவல். 2019-ம் ஆண்டில், மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில், அஜித் தோவல் இந்த பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். தற்போது 3-வது முறையாக பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் உள்ள கிரி கிராமத்தில் 1945-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பிறந்த அஜித் தோவல், கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் உளவு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் திறம்பட பணியாற்றியவர். காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதல் என நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டவர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story