அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்


அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 10 April 2023 2:46 PM IST (Updated: 10 April 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி

அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.


Next Story