போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது சி.பி.ஐ. வழக்கு
கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,
விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் போலி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கேந்திரிய வித்யாலயா சங்க மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் உடன் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் சான்றிதழ்களை பெற்றோர்களுடன் சேர்ந்து போலியாக தயாரித்து மாணவர் சேர்க்கை நடந்தது தெரிந்தது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டு தொடங்கி 193 மாணவர்கள் விதிகளை மீறி சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் வங்கி கணக்குகளுக்கு கைமாறியதும் விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story